முதல் முறையாக புதிய சாதனை படைத்த சிம்பு.! வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து இருப்பார்.‌ வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பிரேம்ஜி அமரன், கருணாகரன், சந்திரசேகர் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா போன்ற முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் வித்யாசமான கதையை கொண்டிருப்பதால் மிகவும் சுவாரசியமாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர்.

மேலும் படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. தமிழில் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் ஒரு தரப்பு எதிர்க்கும். ஆனால் மாநாடு படத்தில் அப்படி நெகடிவ் விமர்சனங்கள் எதுவுமே வரவில்லை. 

இந்த நிலையில் மாநாடு திரைப்படம் வெற்றிகரமாக மூன்று வாரங்களை கடந்து நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் ரூபாய்.58 கோடியும், உலகம் முழுவதும் சேர்த்து மொத்தமாக சுமார் 97.5 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் 100 கோடி க்ளப்பில் இணையவுள்ளது. இந்த பெருமையை பெறும் சிம்புவின் முதல் படமாக மாநாடு அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manadu movie join 100cr club


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->