வரிகட்டாததால், அதிரடியாக முடக்கப்பட்ட பிரபல நடிகரின் வங்கி கணக்குகள்! - Seithipunal
Seithipunal


தமிழில் நடிகர் விஜய் போல தெலுங்கு திரையுலகில் இளம் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவருக்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தற்போது மகேஷ் பாபு சேவை வரியை கட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குகளையும் ஜிஎஸ்டி துறை முடக்கியுள்ளது.  

         

இந்நிலையில் இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘நடிகர் மகேஷ் பாபு 2007&-2008ம் ஆண்டில் சினிமா, விளம்பரப் படத்தில் நடித்து வந்த வருமானத்திற்காக சேவை வரி 18 லட்சத்து 50 ஆயிரத்தை இன்னும் கட்டவில்லை. இதுகுறித்து மகேஷ் பாபுவை சந்திக்க அதிகாரிகள் பலமுறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரது ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கணக்குகள் முடக்கப்படுகிறது. வரி மற்றும் வரிக்கு வட்டி, அபராதம் ஆகியவற்றை சேர்த்து அவர் 73 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும். 

                

மேலும்  அவரது ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து 42 லட்சம் பெறப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி கணக்கில் இருந்து மீதித் தொகை பெறப்படும். வங்கி தர மறுத்தால் மகேஷ்பாபு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mahesh babu bank accounts frozen


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->