மாரி 2 திரைப்படத்தின் "ரவுடி பேபி" பாடல் வீடியோ காட்சிகள் வெளியீடு.!!
maari 2 movie rowdy baby video song release
இயக்குனர் பாலாஜிமோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் "மாரி". இந்த திரைப்படம் தனுஷின் மாறுபட்ட வேடத்தில் வெளியானது., மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை காஜல்அகர்வால் நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களான நடிகர் ரோபோ சங்கர்., விஜய் ஏசுதாஸ்., காளி வெங்கட்., கோபி மற்றும் சண்முகராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷின் ஒன்டர்பார் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்., அடுத்த படியாக மாரி 2 பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அந்த வகையில் மாரி 2 பாகத்தில் நடிகராக தனுஷ் மற்றும் அவருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி அவர்கள் நடித்துள்ளார். மேலும் திரையுலக பிரபலங்களான வரலக்ஷ்மி சரத்குமார்., ரோபோ சங்கர்., வித்யா மற்றும் கல்லூரி வினோத் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷின் ஒன்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் டிசம்பர் 21 ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் "ரவுடி பேபி" பாடல் காட்சிகளை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
English Summary
maari 2 movie rowdy baby video song release