லொஸ்லியாவின் தந்தை செய்த காரியம்.. நள்ளிரவில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 80 நாட்களை கடந்து, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த போட்டியாளர் யார் என் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கவின், லொஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா, சேரன் ஆகியோர் 8 பேர் மற்றுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். மேலும் கடந்த வாரம் சீக்ரட் ரூமில் இருந்த சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருவது. நேற்று முன் தினம் முகென், தாய் மற்றும் தங்கையும் வந்தனர். இவர்களை தொடர்ந்து நேற்று லொஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தையை பார்த்த லொஸ்லியா ஆனந்தத்தில் கதறி அழுதார்.


 
கோபமாக வீட்டிற்குள் வந்த லொஸ்லியாவின் தந்தை, என்ன செய்து கொண்டிருக்கிறாய், வெளியில் எல்லோரும் என்ன பேசுறாங்க தெரியுமா? நீ நீயாக இரு. வந்த வேலையை பாரு என கடுமையாக திட்டினார். இதனைக் கேட்டு மனம் உடைந்த லொஸ்லியா மேலும் கண்ணீர்விட்டு கதறி அழுதார். மேலும் இனி இதுபோன்று நடந்து கொள்ளமாட்டேன் எனவும் லொஸ்லியா தந்தையிடம் கூறினார்.


 
இதனை கண்ட கவின் இந்த பிரச்சினைக்கு நான்தான் காரணம் என கூறி கண்ணீர் விட்டு கதறினார். இதனை பார்த்த  லொஸ்லியாவின் தந்தை ஆண் பிள்ளைகள் அழக்கூடாது. பிக்பாஸ் வீட்டிற்கு எதற்கு வந்துள்ளோம் அதனை மட்டும் பாருங்கள். விளையாட்டில் நன்கு கவனம் செலுத்துங்கள் என சமாதானமாக பேசியுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியே சென்றுவிட்டது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபோல சரவணன் கண்களை கட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை போல, கவினு வெளியேற்றப்பட்டாரோ? என சந்தேகம் ரசிகர் மத்தில் உள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

losliya father in bigg boss home


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->