ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் அறிமுகம் – அருண் மாதேஸ்வரன் இயக்கும் டிசி படத்தின் ஸ்டோரி என்ன தெரியுமா?
Lokesh Kanagaraj debuts as a hero Do you know the story of the DC film directed by Arun Matheswaran
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் லோகேஷ் கனகராஜ், தற்போது ஹீரோவாக திரையில் அறிமுகமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்தை, ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
இப்படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்க, இசையமைப்பில் அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். இப்படத்தின் டைட்டில் ‘DC’ என அறிவிக்கப்பட்டு, அதிரடியாக டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு நிமிடம் 8 வினாடிகள் நீளமுள்ள இந்த டீசரில், லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்கிற கதாபாத்திரத்தில் ரத்தத்தில் மூழ்கிய முகத்துடன், நீண்ட முடி மற்றும் அடர்த்தியான தாடியுடன் குறுகிய நடைபாதையில் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மறுபுறம், வாமிகா கபி நடித்த ‘சந்திரா’, நம்பிக்கையுடன் அவரை நோக்கி நடந்து வரும் காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இது ஒரு ரக்கட் லவ் ஸ்டோரி என ரசிகர்கள் ஊகிக்கின்றனர். டீசரின் சில காட்சிகளைப் பார்த்தால், ஒரு பொறுக்கியும் மற்றும் விலைமாதுவும் தங்களின் வேலையை முடித்துக் கொள்ளும் தருணத்தில், இருவருக்குமிடையில் ஏற்படும் எதிர்பாராத சந்திப்பு, காதலாக மாறும் கதையாக தெரிகிறது.
அதோடு, தேவதாஸின் கொடூரமான கொலைகள் மற்றும் சந்திராவின் பழைய வாடிக்கையாளர் – காதலன் இடையேயான மோதல் போன்ற சுவாரஸ்யமான திருப்பங்களும் படத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டீசரில் லோகேஷின் தோற்றம் ரசிகர்களுக்கு “ரோலெக்ஸ் சாயல்” நினைவூட்டியுள்ளது.
வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், “இயக்குனராக மட்டும் இல்லாமல், நடிகராகவும் லோகேஷ் கனகராஜ் மாஸ் காட்டப் போகிறார்” என ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
English Summary
Lokesh Kanagaraj debuts as a hero Do you know the story of the DC film directed by Arun Matheswaran