எல்.கே.ஜி.படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?.! ஓப்பனிங் என்றால் இப்படித்தான் மாஸாக இருக்கும்.!!  - Seithipunal
Seithipunal


நடிகர் ஆர்.ஜே.பாலாஜி - நடிகை பிரியா ஆனந்த் நடிப்பில் கடந்த பிப்.22 ம் தேதியன்று வெளியான திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படமானது முழுக்க முழுக்க தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி., அதனை கிண்டல் செய்யும் வகையில் உருவாகியுள்ள படம். 

இந்த படத்தில் அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிரபு இயக்கியுள்ளார். இந்த படமானது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த படத்தில் இருக்கும் காட்சிகள் அனைத்தும்., தற்போதைய அரசியலை மையப்படுத்தி., அரசியலில் இருக்கும் சமூக இணையதளங்களின் முக்கிய பங்குகளை எடுத்துரைக்கும் விதமாக அனைவரையும் கவர்ந்தது. 

இந்த படத்திற்கு பெரிய நடிகர்களின் திரைப்படத்தை போன்றே சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு காட்சிகள் திரையிடப்பட்டது. இந்த படமானது தமிழகத்தில் ரூ.2.6 கோடி வசூல் செய்துள்ளது. மேலும்., இந்த படத்தை இளைஞர்கள் அதிகளவில் கண்டு கழித்து வருவதால்., இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LKG movie one day amount collection


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->