அஜித்தை முந்திய விஜய் தேவர்கொண்டா.! லைகர் க்ளைம்ஸ் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வீடியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே நாளில் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படத்தின் ஃக்ளைம்ஸ் வீடியோ வெளியாகியது. தற்போது, யூடியூபில் வலிமை படத்தின் ட்ரெய்லரை இதுவரை 1.4 கோடி பேரும், லைகர் திரைப்படத்தின் ஃக்ளைம்ஸ் வீடியோவை 1.8 கோடி பேர் பார்த்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liger glimpse overtake valimai trailer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->