பட்டையை கிளப்பும் தகவல்.! மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்.!  - Seithipunal
Seithipunal


 

தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் மூன்றாவதாக ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

தற்போது நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இத்தகைய சூழலில் நடிகர் விஜயின் 66வது திரைப்படத்தை தோழா பட இயக்குனரான வம்சி இயக்கவுள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இதன் வேலைகள் துவங்கும் என்று கூறப்படுகிறது மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகின்ற இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். 

மேலும், தமன் இசையக்கவுள்ள இந்த படத்துக்கு கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Keerthi suresh may heroine in thalapathy 66


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->