பிரபல பாலிவுட் நடிகருக்கு மனைவியாகும் கீர்த்தி சுரேஷ்! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து விஜய் ,சூர்யா, விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். 

மேலும் அவர் அதனைத் தொடர்ந்து சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் என்ற படத்தில் சாவித்திரியாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார் .மேலும் இவருக்கென  ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. படவாய்ப்புகளும் குவிந்தது. இந்நிலையில் அவர் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்

பிரபல இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. இதனை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். அமித் சர்மா இயக்குகிறார்.மேலும் இதில் ரஹீமாக நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார் . அவருக்கு மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், பாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது மேலும் சமீபகாலமாக சவாலான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன் அதைப் போலவே இப்படமும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.
 

English Summary

keerthi suresh acin bollywood movie


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal