#தளபதி68 : விஜய்‌யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போதைய தளபதியை 67 படத்தின் அப்டேட்களை படக்குழு அறிவித்து வருகிறது.

அந்த வகையில் இன்று தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த பூஜையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

அது மட்டும் இல்லாமல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரவிக்குமார் புஷ்கர் காயத்ரி என பலர் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் விஜய்யின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி லோகேஷ் கனகராஜ் உடன் நல்ல நட்புடன் இருப்பதால் விஜயின் அடுத்த படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் கதை எழுதிய பிறகு கார்த்திக் சுப்புராஜிடம் வழங்கி அவரின் கருத்தை தெரிந்து கொண்டு அதிலிருந்து திருத்தங்கள் மேற்கொள்வதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthik subburaj possible to direct thalapathy 68 movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->