ஜெயலலிதாவின் இடத்தை பிடித்த தாம்தூம் நாயகி.! பிஸியான நிலையில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


சினிமாயுலகில் சமீபகாலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றையும் சினிமாவாக எடுப்பதற்கு கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது.

மேலும் இயக்குனர்கள் விஜய், லிங்குசாமி, பிரியதர்ஷினி, பாரதிராஜா என பலரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க மும்முரமாக இறங்கியுள்ளனர் .இதனை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எடுத்து வருகின்றார்.

இந்நிலையில் இயக்குனர் விஜய் தான் இயக்கும் ஜெயலலிதாவின் படத்திற்கு தலைவி என பெயரிட்டிருந்தார். மேலும் அதில் ஜெயலலிதாவாக தாம்தூம் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்த, நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து கங்கண ரணாவத் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்திருந்தார், அப்பொழுது 
அவர் கூறியதாவது, நான் எனது சொந்த பயோபிக் படங்களில் நடிப்பதற்கான வேலைகளில் தீவிரமாக இருந்தேன். 

அப்பொழுது நடிகர் விஜய் என்னிடம் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து கூறினார். இதனை கேட்டதும் நான் மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன் ஏனெனில் ஜெயலலிதாவின் கதையும், என் கதையும் ஒரே மாதிரியாக இருந்தது. மேலும் என்னை விட  ஜெயலலிதாவின் கதை பெரிய வெற்றிகதை.

எனவே தற்போதைக்கு ஜெயலலிதா கதை தான் தேவை என்பதை முடிவு செய்து நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும் எனக்கு எப்போதுமே தென்னிந்திய மாநில மொழிப் படங்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். மேலும் அதற்காக காத்திருந்த நிலையில் இத்தகைய திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kangana ranavat act in jayalalitha biopic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->