கமலின் விக்ரம் பட ஷூட்டிங் நடக்குமிடம்.! எதிர்பார்ப்பை கிளப்பிய தகவல்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சிகளும் வெளியானது.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் அதன் பிறகு அரசியலில் பிஸியாக இருந்ததால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கபடாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது, கமலஹாசன் தேர்தலில் தோல்வி அடைந்ததால் மீண்டும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.  

இந்நிலையில் விஜய் சேதுபதியும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறியிருந்தார். இதில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

முதல்கட்டமாக விஜய் சேதுபதி மற்றும் கமல் நடிக்கின்ற காட்சிகளை லோகேஷ் படமாக்கி வந்த நிலையில், சமீபத்தில் படக்குழுவுடன் பகத் பாசிலும் இணைந்தார். இந்த படத்தில் நடிகர் கமலஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராமன் நடிக்கவுள்ளார்

இத்தகைய நிலையில், இந்த படத்தின் அடுத்தக்கட்ட ஷுட்டிங் வேலைகள் வருகின்ற ஆகஸ்ட் - 20 ஆம் தேதி முதல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் நடைபெற இருக்கின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. படம் சிவகங்கை பகுதியில் நடப்பதால், தேவர் மகன் திரைப்படத்தை போன்ற கதைக்களம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamals vikram movie shooting in sivakangai 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->