விக்ரம் படத்தை பார்த்துவிட்டு இசைஞானி போட்ட ட்வீட்.! பதில் ட்வீட் போட்ட கமல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் விக்ரம். இந்த படம் கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியாகி தற்போது வரை தியேட்டர்களில் பட்டையை கிளப்பி வருகிறது. 

மாபெரும் வெற்றிப்படமாக பார்க்கப்படும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக இசைஞானி இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே! மட்டற்ற மகிழ்சசியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே -அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம்."என்று தெரிவித்திருந்தார். 

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமலஹாசன், " நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன்.  நம் பயணம் என்றும்போல் தொடர விழையும் உங்கள் நான்." என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal thanks to elayaraja


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->