போராடி இழப்பதற்கு பெண்களுக்கான நீதிகள் விளையாட்டு அல்ல... பொன்மகள் வந்தாள்...!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஜெ.ஜெ.பிரெட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிப்பில், சூர்யாவின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள்..  இந்த படத்தில் நடிகை ஜோதிகா, நடிகர் பார்த்தீபன், பிரதாப், பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், கொரோனா காரணமாக இது தள்ளிப்போனது. இந்த படம் அமேசான் நிறுவனத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில், பல எதிர்ப்புகளுக்கு பின்னர் மே 29 ஆம் தேதியான இன்று வெளியானது. 

இந்த படம் குற்ற பின்னணி கொண்ட படமாக இருக்கும் என்று வெளியான ட்ரைலரில் இருந்து தெரியவந்தது. இன்று இந்த படம் வெளியான நிலையில், படம் எப்படி உள்ளது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக எதிர்பார்க்கப்படுகிறது. 

பெண்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் மற்றும் கொலைகள், காமுக எண்ணங்களை கொண்ட ஆண்கள் குற்றத்தை மறைக்க அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை அழித்தாலும், ஏஞ்சல் என்ற ஜோதியாக நடிகை ஜோதிகாவின் வாதமும், எதிர்தரப்பு வழக்கறிஞராக பார்த்தீபனின் வாதமும் வெற்றி பெற்றதா? நீதி எப்படி ஜெயித்தது? என்பதே கதை... 

சில காட்சிகளை அடுத்தது நடைபெறும் யூகங்கள் சிந்திக்கும் அளவில் இருந்தாலும், பெண்களுக்கு பல அறிவுரையை கூறி வளர்க்கும் பெற்றோர்கள், தங்களின் ஆண் பிள்ளைகளுக்கும் பெண்கள் குறித்த விஷயம் மற்றும் அவர்களை எப்படி பார்க்க வேண்டும் என்ற பார்வை தெளிவை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும் என்பதை படத்தின் இறுதியில் கூறியுள்ளனர். 

பல குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றாலும், அதனை தீர விசாரித்து, உண்மையை அறிந்து ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி சட்டம் என்பது அனைவருக்கும் பொது என்பதையும், பெண்களுக்கான பாலியல் குற்றங்கள் தொடர்பான பிரச்சனைகளில் உண்மை உறுதியாகும் பட்சத்தில், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதும் படத்தின் கருத்தாக அமைகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jyothika ponmagal vandhal Movie review


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->