#OMG!!! ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில், சசிகலாவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ஆம் டிசம்பர் மாதம் ௫ ஆம் தேதி மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்ட போட்டி நிலவுகிறது. இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குநர் ப்ரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோருடன் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கும் பணியயை தொடங்கியுள்ளனர்.

பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் வரலாறு படத்தில் நித்யாமேனன் ஜெயலலிதாவாக நடிக்கின்றார், இந்த படத்திற்கு  `தி அயர்ன் லேடி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி வெளியானது. 

`தி அயர்ன் லேடி’ படப்பிடிப்பு ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் தயராகி வருகிறார். இவர் தயாரிக்கும் இந்த படத்தில், ஜெயலலிதாவாக நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப்படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவியிடம்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JEYALALITHA MOVIE STAR CAST OF SASIKALA


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->