ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கவிருப்பது யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal



மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது. மிஷ்கினின் உதவி இயக்குநர் ப்ரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோருடன் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கும் போட்டியில் இருந்தனர்.

இந்த நிலையில் பிரியதர்ஷினி ஜெயலலிதாவின் வாழ்க்கைக் வரலாறை இயக்குகிறார். இந்த படத்தில் நித்யாமேனன் ஜெயலலிதாவாக நடிக்கின்றார்,இந்த படத்திற்கு  `தி அயர்ன் லேடி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி வெளியானது. 

          

`தி அயர்ன் லேடி’ படப்பிடிப்பு ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இவரை எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyalalitha history movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->