என்ன இது.! உனக்கு வயசே ஆகாதா? பிரபல முன்னணி நடிகரை கண்டு பொறாமையில் பொங்கிய ஜெனிலியா!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அதனை தொடர்ந்து அவர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்,மேலும் இவர் தனது குறும்பு தனம் மற்றும் கலகலப்பான குணத்தால் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து ஜெனிலியா  நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டு ,சினிமா துறையிலிருந்து விலகினார். மேலும் அவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கும் கோமாளி பட போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில்  ஜெயம் ரவி மிகவும் சிறு வயது, பள்ளி மாணவராக காணப்பட்டார். இந்நிலையில் இப்புகைப்படத்தை கண்ட நடிகை ஜெனிலியா, என்ன இது ஜெயம் ரவி, உங்களுக்கெல்லாம் வயசே ஆகாதா?  மீண்டும் டீன் ஏஜ் பையன் போல இளமையாக உள்ளீர்கள். வாழ்த்துக்கள் என கூறியுள்ளார் 

English Summary

jenelia tweet about jayam ravi komali movie poster


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal