பிரபல மூத்த நகைச்சுவை நடிகர் கொரோனா வைரஸால் மரணம்..! ரசிகர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஜப்பானைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் கென் ஷிமுரா கரோனா வைரஸ் பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்து இருக்கின்றார்.

இவர்கள் இறப்பு அவருடைய ரசிகர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுகான் பகுதியில் துவங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. இதுவரை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் உயிரிழந்திருக்கின்றனர். 

பல லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஜப்பானைச் சேர்ந்த நகைச்சுவை நடிகரான கென் ஷிமுரா கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு டோக்கியோவில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் தற்போது உயிரிழந்து இருக்கின்றார். பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து இருக்கும் இவர் தன்னுடைய 70 வயதில் உயிர் பிரிந்து இருக்கின்றார். 

இவருடைய மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

japan comedy actor death by corona 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->