ஜப்பானில் தர்பார் திருவிழா.. கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.. வசூல் சாதனை.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகைகள் நயன்தாரா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர் யோகி பாபு, ஸ்ரீ மான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 

இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் சும்மா கிழி என்ற தொடக்க பாடலை மறைந்த பாடகர் பத்ம ஸ்ரீ எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த படத்தின் இசையமைப்பு பணிகளை அனிருத் மேற்கொண்டு இருந்தார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் சந்தோஷ் சிவனால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த திரைப்படம் கடந்த பொங்கல் 2020 அன்று வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்கு பின்னர் காவல் அதிகாரியாக நடித்ததால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை செய்து ரூ.250 கோடி வரை வசூல் செய்தது. 

இந்த படம் கடந்த 2020 ஆம் வருடம் பொங்கலன்று வெளியான நிலையில், மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டது. உலகம் முழுவதும் இந்நடவடிக்கை தொடர்ந்த நிலையில், ரஜினிகாந்தின் திரைப்படம் உட்பட பல திரை நடிகர்களின் படம் எதிர்பார்த்த நாளில் வெளியாகவில்லை. அண்ணாத்த திரைப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படம் ஜப்பானில் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ரூ.25 கோடி ஒரே வாரத்தில் அங்கு வசூல் செய்துள்ள நிலையில், இதனை அவரது ரசிகர்கள் #DarbarBlockbusterInJapan என்ற ஹாஷ்டேக்கில் ட்விட்டர் தளத்தில் தெரிவித்து வருகின்றனர். ஜப்பானில் ரஜினிக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan Cinema Theater Shows Rajinikanth Darbar Houseful Make History Amount Record


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->