ஒரு கல் ஒரு கண்ணாடி ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம்! மாப்பிளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நகைச்சுவை நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை மதுமிதா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொல்லு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர். மேலும் அவர் சின்னப்பாப்பா , பெரிய பாப்பா என்ற காமெடி தொடரிலும் நடித்தார்.

 அதனை தொடர்ந்து மதுமிதா சந்தானத்துடன் இணைந்து ஒரு கல்  ஒரு கண்ணாடி திரைபடத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

மேலும் அவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை, புலி, ஹலோ நான் பேய் பேசுறேன், சரவண இருக்க பயமேன், விசுவாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது  நடிப்பில் வெளியான அத்தனை நகைச்சுவை காட்சிகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜாங்கிரி மதுமிதாவுக்கும் , அவருடைய தாய் மாமன் மகன் மோசஸ் ஜோயல் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி 15ம் தேதி கோயம்பேட்டில் உள்ள JP ஹோட்டலில் நடைபெற உள்ளது.

         

மோசஸ் ஜோயல் ஒரு குறும்பட இயக்குனர். மேலும் பிரபல திரைப்பட இயக்குனரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ஜாங்கிரியின் திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jangiri madumitha got marry soon


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->