ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் மகள் செய்த காரியம்.! மனவேதனையில் உள்ள ஜாக்கிசான்.!! - Seithipunal
Seithipunal


ஜாக்கிசான் என்று சொன்னால் இவரை அறியாத குழந்தைகளும் இல்லை., பெரியவர்களும் இல்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உலகளவில் ரசிகர்களை கொண்டவர் ஜாக்கிசான். திரைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக., வாழ்நாள் சாதனையாளர் என்ற ஆஸ்கார் விருதுக்கு சொந்தக்காரர் என்ற பெருமையையும் பெற்றவர். 

கடந்த 1990 ம் வருடத்தின் ஆசிய அழகியான எல்லெய்ன் நக் - ஜாக்கிசானுக்கு பிறந்தவர் எட்டா நக் (19). இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் பெற்றோரிடமிருந்து தனிமையில் வசித்து வந்தார். 

இந்நிலையில்., இவர் கனடா நாட்டை சார்ந்த அட்டூன் (31) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அட்டூன் கனடா நாட்டில் சமூக ஊடக பிரபலங்களுள் ஒருவராவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். 

இவர்கள் இருவரும் கனடா நாட்டில் உள்ள ஊடகத்தை நடத்தப்போவதாகவும்., திருமணத்திற்கு பின்னர் அந்த நிறுவனத்தை திறம்பட செயல்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் தங்களின் திருமணம் கனடா நாட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு கடும் மனஉளைச்சலில் ஜாக்கிசானும் அவரின் மனைவியும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JACKIECHAN DAUGHTER DOING MARRIAGE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->