இரட்டை நாடகம் ஆடுவது இந்த நடிகைக்கு புதுசில்ல.. எப்பவாதுன்னா ஓகே.. எப்பவுமே இப்படி தானா?  - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெற்றிமாறன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஹிந்தி தெரியாததால் தான் அவமானம் பட்டதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு ஆதரவாக, தமிழ் திரைப் பிரபலங்கள் இந்தி மொழிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் களை அணிந்து, சமூகவலைதளங்களில் "இந்தி தெரியாது போடா" என்ற ஹேஷ்டேக்-யை ட்ரண்ட் செய்து வந்தனர்.

இதற்கிடையே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த ஹேஷ்டேக் குறித்து ஒரு பதிவிட்டு இருந்தார். அதில், "ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது.  இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல. #ஹிந்தி_தெரியாது_போடா" என்று பதிவிட்டுள்ளார். அதற்கு பாஜகவினரும் "திமுக வேண்டாம் போடா" என்ற ஹேஷ்டேக் ட்வீட்டர் வலைத்தளத்தில் ட்ரண்ட் வருகிறது. 

ஐஸ்வர்யா ராஜேஷ் காக்காமுட்டை படத்திற்கு முன்பு தனக்கு சேரி பற்றி ஒன்றுமே தெரியாது என பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதே வடசென்னை படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு மற்றொரு மேடையில் தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் உள்ள சேரியில் தான் எனவும் மாற்றி பேசியுள்ளார்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது உடையில் #ஹிந்தி_தெரியாது_போடா என்று எழுதியதை கண்டித்து அவருக்கு இந்தி தெரியும் என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோவை தற்போது வைரலாக்கி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ishvarya rajesh double standard video viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->