பாஜகவில் இணைகிறாரா வனிதா விஜயகுமார்?! இன்று இணைய வாய்ப்பு!  - Seithipunal
Seithipunal


நடிகை வனிதா விஜயகுமார் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

இது குறித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "வனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சு!!!  ஒருமையில்லை, பன்மை! அடுத்து இணைவது காதலருடனில்லை, கட்சியிலாம்!" என தெரிவித்துள்ளார். 

மூன்றாவதாக திருமணம் செய்த வனிதா, அண்மையில் கணவர் பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக உருக்கமான வீடியோவை வெளியிட்டிருந்தார். நடிகையாக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமான வனிதா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தான், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணையபோவதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது செய்தியா? வதந்தியா? என்பதனை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்தால் தான் தெரியவரும். 

அதே வேளையில் அவர் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், பாஜக தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is vanitha vijayakumar join bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->