யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை... நடிகர் சசிகுமார் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாநகர காவல்துறையினரின் சார்பாக அமெரிக்கன் கல்லூரியில் "வெல்வோம்" என்ற குற்ற தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை மாநகரத்தின் காவல் ஆணையர் டேவிட்ஸன் தேவாசீர்வாதம் குறும்படத்தை வெளியிட்ட நிலையில்., இந்த விழாவில் நடிகர் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சசிகுமார் பேசிய சமயத்தில்., "காவல்துறையினரின் சார்பாக நடிகர்களை வைத்து குறும்படம் தயாரித்து வெளியிட்டுள்ளனர். நாங்கள் அனைவரும் திரையில் தோன்றும் கதாநாயகர்கள்.. காவல்துறையினர் தான் நிதர்சனமான கதாநாயகர்கள். எந்த பிரச்சனை இருந்தாலும்., உங்களுக்கு ஏற்பட்டாலும் காவல்துறையினரின் செயலியை உபயோகம் செய்யுங்கள். 

sasikumar, sasikumar images, director sasikumar,

மேலும்., கண்காணிப்பு காமிராக்கள் இருப்பது சாட்சி சொல்வதற்கு சமமான ஒன்றாகும். நாம் பிறரிடம் சாட்சி சொல்வதற்கு பயந்தாலும்., கண்காணிப்பு காமிராக்கள் யாருக்கும் பயப்பட வேண்டும் என்ற அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் சமுத்திரக்கனி " தமிழகத்தில் ஏழரைக்கோடி மக்கள் தொகை உள்ள நிலையில்., சுமார் ஒன்றரை இலட்சம் காவல் துறையினர் மட்டுமே பணியில் உள்ளனர். அனைத்திற்கும் முன்னதாக காவல்துறையினர் வரவேண்டும் என்று கூறினால் என்னதான் செய்ய இயலும்?. இளைஞர்கள் பிற செயலிகளை அலைபேசியில் பதிவிறக்கம் செய்வதற்கு பதில் காவல்துறையினர் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். ஒரேயொரு படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்ததற்கு ஒரு மாதக்கணக்கில் மனவருத்தத்துடன் இருந்தேன். காவல்துறை அதிகாரிகள் தினமும் இவ்வாறே இருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai sasikumar speech about police and CCTV camera


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->