நடிகைகளை படுக்கைக்கு அலைக்கும் கலாச்சாரம்.. பக்கம் பக்கமாக தயாரான விசாரணை அறிக்கை..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் கடந்த 2017 ஆம் வருடத்தின் போது பிப்ரவரி 17 ஆம் தேதியன்று மலையாள நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நடிகர் திலீப் உள்ளிட்ட சுமார் 10 பேர் சிக்கியிருந்தனர். 

இருப்பினும் இது குறித்த வழக்கு விசாரணை இன்னும் முடியாமல் தொடர்ந்து வரும் நிலையில்., மலையாள திரையுலகில் நடிக்க வரும் நடிகைகளை நடிகர்கள்., தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் போன்றோர் படுக்கைக்கு அழைப்பதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்ததது. 

இதனைத்தொடர்ந்து நடிகைகளுக்காக மலையாள திரைப்பட உலகை சார்ந்த பெண்கள் டபிள்யு.சி.சி என்ற அமைப்பினை கடந்த 2017 ஆம் வருடத்தில் துவங்கி., திரையுலகில் அளிக்கப்படும் அநீதிகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முதலிச்சார் பினராயி விஜயனை சந்தித்து மனுவும் அளிக்கப்பட்டது. 

இதனைப்பெற்ற பினராயி விஜயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு., மலையாள திரையுலகை சார்ந்த பலரையும் சந்தித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஆதாரத்துடன் அறிக்கையும் தாக்கல் தயாரிக்கப்பட்டது. 

இது தொடர்பான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயனுடன் அளித்த நிலையில்., இந்த விஷயம் தொடர்பான அறிக்கையில் உள்ள சில தகவல்கள் தற்போது கசிய துவங்கியுள்ளது. இதில் பெரும் அதிர்ச்சியாக படவாய்ப்பிற்க்காக நடிகைகளை நடிகர்கள்., இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் பகிரங்க குற்றசாட்டு தெரிவித்துள்ளனர். 

மேலும்., திரைப்படவுலகில் இருக்கும் பல ஆண்களும் - பெண்களும் இவ்விவகாரம் குறித்து பேசி வெறுப்புணர்வை வெளிப்படுத்தியதும்., சிலர் பயத்தின் காரணமாக பேச மறுப்பு தெரிவித்ததும் சுட்டி காட்டப்பட்டுள்ளது. இதனைப்போன்று படப்பிடிப்பு தலத்தில் நடிகையின் தனிமனித உரிமை மீறப்படுவது., கழிவறை மற்றும் உடைமாற்றும் அறை போன்ற வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பல விஷயங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்., இது போன்ற அவலமான நிலையில் இருந்து நடிகைகளை காப்பாற்ற கேரள அரசிற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும்., படுக்கைக்கு அலைக்கும் கலாச்சாரம் நிறைவுக்கு வர கடுமையான சட்டங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Kerala film industry sexual harassment investigation report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->