டிடிக்கு மறுமணமா.? அவரே வெளியிட்ட வீடியோவால்., ரசிகர்கள் ஆர்வம்.!  - Seithipunal
Seithipunal


தொலைக்காட்சியில் அதிகப்படியான ரசிகர் பட்டாளம் இருக்கும் ஆங்கர் என்றால் அது டிடி தான். அனைவருக்கும் ஆஸ்தான நாயகியாக இருக்கும் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மேலும், விருது வழங்கும் விழாவிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பரபரப்பாகவே இருப்பார்.

ஷார்ட் டாப்பில்., குதூகலமாய் டிடி செய்த வேலை..! உறைந்து போன ரசிகர்கள்.! -  Seithipunal

இவரது சுறுசுறுப்பான பேச்சும், அழகான முக பாவனைகளும் இவருக்கு அதிக ரசிகர்களை பெற்றுத் தந்தது. தனது கலகலப்பான பேச்சின் மூலமாக மக்கள் மத்தியில் இளவரசியாக வலம் வரும் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடக்கின்ற வாய்ப்பும் கிடைத்தது.

இந்நிலையில், தற்போது டிடி இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கின்றார். முக்காதே பெண்ணே என்ற பாடலை அவர் தற்போது இயக்கி இருக்கின்றார். தனது சொந்த தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த பாடலுக்கு கோபி சுந்தர் என்பவர் இசையமைப்பாளராக இருக்கின்றார்.

பாடலின் போஸ்டரை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். இந்த பாடலின் டைட்டிலை கண்ட ரசிகர்கள் இது என்னடா டைட்டில் என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர். மேலும், சிலரோ மணக்கோலத்தில் உள்ள டிடியை கண்டு அவருக்கு மறுமணமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

if dd getting 2nd marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->