நடிகர் ரஜினிக்கு சிறப்பு விருது! மத்திய அரசு அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் எண்டா்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு இணைந்து, வருடம்தோறும் கோவா திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. 

சர்வதேச தரத்திலான இந்தத் திரைப்பட விழாவில், உலகம் முழுவதிலும் இருந்து திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். வரும் நவம்பர் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறயுள்ளது.  வழக்கமாக 10 நாள்கள் நடைபெறும் கோவா திரைப்பட விழாவில் சுமார் 200 படங்கள் திரையிடப்படும். 50-ஆவது ஆண்டு விழா என்பதால், சுமார் 300 படங்கள் திரையிடப்படயுள்ளது.

                 

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019 என்கிற சிறப்பு விருது வழங்கப்படுகிறது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icon of golden jubilee of iffi 2019


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->