மனைவிக்கு போன் செய்து கதறிவிட்டு, கணவன் எடுத்த விபரீத முடிவு.! சிக்கிய இறுதி கடிதத்தால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ராஜாபாளையம் பகுதியை  சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி தமிழ்ச் செல்வி.இவருக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்நிலையில் ரமேஷ் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நாமக்கலில் உள்ள தனியார் நிதி நிறுவன வங்கியில் இருந்து லாரி வாங்குவதற்காக  12 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

மேலும் இதற்காக மாதந்தோறும் கடன் தவணையை செலுத்தி  வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக ரமேஷ் கடன் தவணை செலுத்தாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நிதி நிறுவனஅதிகாரிகள் ரமேசின் வீட்டிற்கு சென்று, சரியாக பணத்தை கட்டுங்கள் இல்லையென்றால் லாரியை பறிமுதல் செய்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள வி.ஐ.பி. சிட்டி பகுதிக்கு வந்த ரமேஷ், மனைவி தமிழ்ச்செல்விக்கு போன் செய்து, லாரிக்கான பணத்தை தன்னால் கட்ட முடியாததால், அதிகாரிகள் மிரட்டிச் சென்றது அவமானமாக உள்ளது. நான்  தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன், குடும்பத்தை பார்த்து கொள் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி உடனடியாக தன்னுடைய உறவினர்களுடன் அங்கு சென்று பார்த்த போது,ரமேஷ் வி‌ஷம் குடித்த நிலையில் கிடந்துள்ளார்.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் நேற்றிரவு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும் அவரது சட்டைப்பையில் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது.

அதில், நிதி நிறுவன அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளார்.இதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband comits suicide by money problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->