இலியானாவை போல அழகான இடுப்பு பெற எளிமையான இயற்கை முறைகள்..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெரும்பாலானோர் தங்களின் உணவு பழக்கவழக்கம் மற்றும் பிற காரணத்தால் தங்களின் உடல் நலத்தை பாதுகாக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் அவர்களின் உடல் நலனும் பாதிக்கப்பட்டு., உடலின் அமைப்பும் வெகுவாக மாற்றமடைந்து உள்ளது. இன்றுள்ள பெரும்பாலான பெண்கள் தங்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இடமாக இடுப்பையும் வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில்., அழகான இடுப்பை பெற்று பராமரிப்பது எப்படி என்பது குறித்து இனி காண்போம். தினமும் காலையில் நாம் தேநீர் மற்றும் கொட்டை வடியிலை நீர் அருந்துவது வழக்கம். இடுப்பின் அழகை அதிகரிக்க நினைப்பவர்கள் வெது வெதுப்பான இளம் சூடுள்ள நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்து வர வேண்டும். 

இந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு: 

 

நமது உடலில் இருக்கும் தேவையற்ற நீரை வெளியேற்றும் பூசணிக்காய்., வாழைத்தண்டு போன்றவற்றை உண்ண வேண்டும். வாழைத்தண்டு சாறு மற்றும் பூசணிக்காய் சாறை தினமும் ஒரு வகையான சாறாக அருந்தி வர வேண்டும். இந்த பழச்சாறுகளை வெறும் வயிற்றிலும் அருந்தலாம். நீர்சத்து அதிகளவில் நிறைந்துள்ள காய்கறிகள் பழவகை உணவுகளை சாப்பிட வேண்டும். 

தினமும் அல்லது வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் சாப்பிடும் எண்ணெய்யினால் பொறிக்கப்பட்ட உணவுகளை தவித்து., வேக வைத்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். இதனைப்போன்று நார்சத்து உள்ள காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். அதிகளவு கலோரிகளை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. நொறுக்கு தீனிகளை அறவே ஒதுக்க வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to control hip size like ilieana hip


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->