சற்றுமுன் நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்வீட்.! - Seithipunal
Seithipunal


பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும், நடிகர் ரஜினிகாந்த் தனது நன்றியினை, சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகில் உள்ள முக்கிய முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாரத பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோரும் நடிகர் ரஜினிகாந்துக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், "மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும், திரைக் கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hbd rajinikanth thanks


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->