ஆன்லைனில் உதவி கேட்ட கல்லூரி மாணவி.. ஜிவி பிரகாஷ் செய்த நிகழ்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் செலுத்த உதவிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உதவியதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், நாச்சியார் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷிடம், கல்லூரி மாணவி ஹேமப்ரியா என்பவர் உதவி கேட்டிருந்தார். மாணவி தனது ட்விட்டர் பதிவில், 'ஹாய் சார், நான் ஹேமப்ரியா, கும்பகோணம். நான் பிசிஏ படித்து வருகிறேன். இந்த மாதம் தேர்வு தொடங்குகிறது. அதற்கான ஃபீஸ் கட்ட உதவி செய்யுங்கள்' என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணவி சொன்ன ஜி.பே போன்நம்பருக்கு ஜி.வி. பிரகாஷ் பணத்தை அனுப்பியுள்ளார். தற்போது இவருடைய இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால், மாணவி ஒரு பேக் ஐடி என ஜி.வி. பிரகாஷின் ரசிகர்கள் சிலர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GV Prakash help to college student in twitter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->