ஜோதிகா திரைப்படத்திற்கு திடீர் எதிர்ப்பு.! அதிர்ச்சியில் ஜோதிகா.!!  - Seithipunal
Seithipunal


திருமணத்திற்கு பின்னர் திரைத்துறையில் தோன்றிய நடிகை ஜோதிகா., கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவ்வாறாக ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படங்களான 36 வயதினிலே., மகளீர் மட்டும்., நாச்சியார்., காற்றின் மொழி போன்ற திரைப்படங்கள் ஆகும். இந்த திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில்., ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படம் வெளியாகி நல்ல மதிப்பை மக்கள் மனதில் பெற்றுள்ள நிலையில்., இந்த திரைப்படத்தில் நடிகை ஜோதிகா பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் - ஆசிரியைகள் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு பாடங்கள் நடத்தாமல் இருந்து வருகின்றனர். 

jothiga, ratsachi, ratsasi movie,

இதுமட்டுமல்லாது கதை புத்தங்களை படித்தல்., அலைபேசியில் முடங்கி கிடத்தல்., மாணவர்களின் புகைப்பழக்கம் மற்றும் வன்முறை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெற்றாலும்., மாணவர்களின் மீது கவனம் செலுத்துவதில்லை என்ற கருத்தும்., இதனால் உயர் கல்விக்கு செல்வதும் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் காட்சிகள் அமையப்பெற்றுள்ளது. 

இது குறித்த காட்சிகள் உண்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால்., கடுமையான எதிர்ப்பானது கிளம்பியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஜோதிகா குறித்து அவதூறாக பேசியும்., கண்டன பதிவுகளையும் தெரிவித்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt school teachers hate jothiga ratsasi movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->