லாஸ்லியா-தர்ஷன் ரொமான்ஸை கண்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள்.! அண்ணன் தங்கையாகவே பார்த்து பழகிட்டோம்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தான் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. 

லாஸ்லியா கலந்து கொண்ட அதே சீசனில் நடிகர் தர்ஷனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் லாஸ்லியாவுக்கு நிறைய ரசிகர் கூட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து நடிகை லாஸ்லியா நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார். 

தற்போது மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற திரைப்படம் தமிழில் கூகுள் குட்டப்பன் என்று ரீமேக் செய்யப்பட்டது. இதனை கேஎஸ் ரவிக்குமார் தயாரித்திருக்கிறார்.

லாஸ்லியா மற்றும் தர்ஷன் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் மே 6-ஆன இன்று கூகுள் குட்டப்பன் படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் சயின்ஸ் ரீதியாக பெரிய அளவில் கான்செப்ட் எதுவும் இல்லை என்பது வருத்தத்தை கொடுக்கிறது. மாறாக சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. 

மேலும் பிக் பாஸ் வீட்டில் அண்ணன் தங்கை போல பழகிய தர்ஷன் மற்றும் லாஸ்லியாவை காதல் ஜோடிகளாக ரொமான்ஸ் செய்ய விட்டு பார்ப்பதற்கே கண்றாவியாக இருக்கிறது என்று ரசிகர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google kuttappan released 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->