அவெஞ்சர்ஸ் படம் பார்த்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.! மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பரிதாபம்!! - Seithipunal
Seithipunal


ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் படமான அவெஞ்சர்ஸ் தி எண்டுகேம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் மாபெரும் வசூல் சாதனையும் படைத்துள்ளது. 

அவெஞ்சர்ஸ் படதொடரில் இது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் முக்கிய இருகதாபாத்திரங்கள் இறந்துபோய் விடுவது போன்ற உணர்வு பூர்வமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் சீனாவில் நிங்போ  நகரைச் சேர்ந்த காளி என்ற 21 வயது நிறைந்த கல்லூரி மாணவி அவெஞ்சர் திரைப்படத்தை தனது நண்பர்களுடன் திரையரங்கு சென்று பார்த்துள்ளார். அவர் படத்தில் சூப்பர் ஹீரோ ஒருவர் இறந்து போவதை  கண்டு அழ தொடங்கியுள்ளார். மேலும் படத்தை தொடர்ந்து பார்த்த அவர் சிறிது நேரத்தில் தேம்பித் தேம்பி அழுதுள்ளார். 

இவ்வாறுதொடர்ச்சியாக அழுது கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் மூச்சுவிட முடியாமல் தவித்துள்ளார். மேலும் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அவரது தோழிகள் செயற்கை சுவாசம் கருவிகளின் உதவியோடு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மன அழுத்தத்தால் தொடர்ந்து அழுததால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர். மேலும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl in serious condition by crying while watching avenger movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->