ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை, வித்தியாசமான முயற்சியில் களமிறங்கும் கெளதம் மேனன்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இயக்குனர்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கி வருகிறார். மேலும் இதில் நித்யாமேனன் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். `த அயர்ன் லேடி’ என்ற பெயரில் உருவாகிவரும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி வெளியானது. மேலும் படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க இருக்கிறது.

மதுமட்டுமின்றி இயக்குனர் பாரதிராஜா மற்றும்  இயக்குனர் விஜய்யும் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    

இந்நிலையில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை மட்டும் டிவியில் தொடராக வெளியாக இருக்கிறது. ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார். மேலும்  30 பகுதிகளாக இந்த தொடர் ஒளிபரப்பப்படும் ,ஒவ்வொரு பகுதியும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி நடிகர்கள் ரஞ்சித் மற்றும் வினீத் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gawtham menon direct serial about jayalalitha political life


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->