மரண மாஸ் காட்டிய எஸ்.பி.பி., பங்கமாய் வச்சு செய்த கங்கை அமரன்.! - Seithipunal
Seithipunal


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் "பேட்ட". இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில், ரஜினிகாந்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.மேலும் இதில் சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  மேலும் இதில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் மரண மாஸ் முதல் பாடலின் சிங்கள் ட்ராக் வெளியாகி, சமூகவலைதளங்களில் வைரலானது.மேலும் சென்னை தமிழில் தரலோக்கலாக இருக்கும் இந்த பாட்டிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் இந்த பாடலை அனிருத் மற்றும் எஸ்.பி.பி ஆகியோர் பாடியுள்ளனர்.ஆனால் எஸ்.பி.பிக்கு இதில்  இரண்டு வரி மட்டுமே பாட கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அனிருத்திற்கு எதிராக பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தது.

இந்நிலையில் இதனை கிண்டல் செய்து கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.ஆடு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 

English Summary

gangai amaran teases spb


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal