திடீரென உள்ளே சென்ற கடல்.! அதிகாலை நேரத்தில் மீனவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 5 மணி அளவில் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மீனவர்கள் ஏரிபுறக்கரை பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். 

அப்போது துறைமுகத்துக்கு வந்த மீனவர்கள் கடலில் துறைமுக வாய்க்கால்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் தண்ணீர் இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். துறைமுக கால்வாய் பகுதிகளில் ஐந்தடி மட்டத்திற்கு எப்போதும் கடல் நீர் இருக்கும்.

இருப்பினும், கடல் நீரானது 200 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கி இருந்ததை அப்போது தான் கவனித்தனர். பொதுவாக காலை நேரத்தில், தை மாதம் முதல் சித்திரை மாதம் வரையில் 50 மீட்டர் தொலைவிற்கு கடலானது உள்வாங்கி இருப்பது வழக்கம். 

சில நாட்களாகவே காற்றலைகள் கடலில் இல்லாமல் அமைதியாக காணப்படுள்ளது. எனவே, மீனவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடல் உள்வாங்கியதால் படகுகளை கடலில் செலுத்த இயலாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறைமுக வாய்க்கால்களை தூர்வாரி தங்களது பிரச்சினைக்கு தீர்வளிக்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fishers shock about sea in adhirampattinam 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->