நல்லது நடக்க அரசியலிற்கு ரஜினி வர வேண்டும்.. முன்னாள் இந்திய அழகி பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


திரையுலகின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருகை தருவார்? என்ற கேள்விக்கு பதில் கூறும் விதமாக கடந்த 12 ஆம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதில் தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும் என்றும், தேர்தல்களில் போட்டியிடுவதற்கு இளைஞர்களுக்கு அதிகளவு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

மேலும், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு மற்றொரு தலைமை இருக்க வேண்டும் என்றும், எந்த காரணத்தினாலும் தான் முதல்வராக மாட்டேன் என்று தெரிவித்து மூன்றம்ச அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சமயத்தில், தனது கருத்துக்கள் அனைத்தையும் மக்களின் மத்தியில் கொண்டு செல்ல உதவி செய்துள்ள ஊடகம் மற்றும் பத்திரிகை, சமூக வலைத்தளங்களிற்கு நன்றி என்று தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்திலும் இதற்கான பதிவை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், திருச்சியில் உள்ள விடுதியில் பெண்கள் ரோட்டரி சங்கத்தில் மகளிர் தினவிழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சி காட்டுரை சொந்த ஊரக கொண்ட முன்னாள் இந்திய அழகி அனுகீர்த்திவாஸ் கலந்துகொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இவர் பேசிய சமயத்தில்,  

கடந்த 2018 ஆம் வருடத்தில் நான் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டேன். எனது சொந்த ஊர் திருச்சியாக இருந்தாலும், சென்னையில் குடும்பத்தினருடன் குடியேறிவிட்டோம். இந்திய அழகியாக நான் தேர்ச்சியானவுடன், இரண்டு திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தமிழ்நாட்டின் அரசியலை பொறுத்தவரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போன்று ஆளுமை திறன்மிக்க நபர்கள் யாரும் இல்லை. இவர் மறைந்துவிட்டாலும், இவரை பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். இவரைப்போன்ற பெண்கள் அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்க வேண்டும். நல்ல ஆளுமை திறன்கொண்ட, மக்களுக்கு நன்மை செய்யும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும். தற்போதைய இளம் தலைமுறையினர் அரசியலிற்கு வர அதிகளவு ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex Miss India anu speech about rajinikanth political entry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->