சொகுசு கார் வாங்கிய வாரிசு நடிகர்.! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனாகிய இவர், செகண்ட் ஷோ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

இவர் தமிழில் வாயை மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற திரைப்படங்களில் துல்கர் சல்மான் நடித்து இருப்பார். இவருக்கு இளம்பெண்கள் ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கும். இவர் பெரிய ஸ்டாரின் மகனாக இருந்தாலும் கூட அவரது சொந்தத் திறமையால் தான் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். 

Leg Injury? Not a problem for the dedicated Dulquer Salmaan - DGZ Media

தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் துல்கர் சல்மான் நடித்து வருகின்றார். இவர் நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்பாக கார் விற்பனை செய்கின்ற தொழிலில் ஈடுபட்டு இருந்தார். 

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் பிறந்தநாளை முன்னிட்டு துல்கர் சல்மான் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியது. 

இத்தகைய நிலையில் 2.50 கோடி மதிப்புடைய மெர்சிடிஸ் எனும் சொகுசு காரை துல்கர் சல்மான் வாங்கியிருப்பதாக அந்த காரை தயாரித்த நிறுவனம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dulquer salmaan bought new car


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->