தருமபுரியில் திரௌபதிக்கு ஏற்பட்ட சிக்கல் ! திமுக காரணமா ? - Seithipunal
Seithipunal


இயக்குனர் மோகனின் இயக்கத்தில், கூட்டு தயாரிப்பில் வெளியான முதல் தமிழ் படமாக நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் திரௌபதி. இப்படத்தின் டிரைலர் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த தாக்கத்தின் ஏற்படுத்தியது. அதனால், படத்தை காண்பதற்கான ஆர்வம் அதிகமாக இருந்தது.

தியேட்டர் கிடைக்காமல் அல்லாடும் சிறு பட்ஜெட் படங்களுக்கு இடையே தமிழகத்தில் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் தலைநகர் உட்பட பல பகுதிகளில் இப்படம் ரிலீஸ் செய்யப்படுவதில் இன்று இரவு வரை சிக்கல் நீடித்து வந்தது. படம் வெளியாகுமா இல்லையா என தெரியாமல் ரசிகர்கள் கொந்தளிப்புடன் இருந்தனர்.

தருமபுரியில் இந்த சிக்கல் ஏற்பட்டதன் பின்னணியில் திமுகவை சார்ந்த தருமபுரியின் எம்பி செந்தில்குமார் இருப்பதாக கூறப்படுகிறது.. ஏற்கெனவே, இப்படத்தினை வெளிவராமல் முடக்குவதற்காக தேசிய எஸ்சி எஸ்டி ஆணையத்தில் புகார் செய்தது திமுகவின் வேலையாகத்தான் இருக்கும் என மக்கள் பேசி வந்தனர். தணிக்கை குழுவில் தடுக்க முடியாததால், தற்போது தருமபுரி பகுதியில் படத்தினை வெளியிட தடை செய்யும் விதமாக விநியோகஸ்தர்களை, திமுகவினர் மிரட்டி வருவதாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றது.

பெண்கள் நலனுக்கான விழிப்புணர்வு படம் என்று விளம்பரம் செய்யப்பட்டதால் குடும்பத்துடன் பார்க்க ஆர்வமாக இருந்த நிலையில், திமுகவினரால் அதற்கு தடை ஏற்படுவதை கண்டு பொதுமக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Draupathi Movie release issue in Dharmapuri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->