அட்டகாசமாக வெளியானது திரௌபதி டைட்டில் போஸ்டர்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் கூட்டுத் தயாரிப்பு (Crowd Funding) முறையில் முதல் திரைப்படமாக உருவாகி வருவது திரெளபதி என்ற திரைப்படம். இத்திரைப்படத்தினை பழைய வண்ணாரப்பேட்டை படத்தினை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார்.  சமூக வலைதளங்கள் மூலம் செய்த விளம்பரத்தின் வாயிலாக இந்த திரைப்படத்திற்கு பலரும் தயாரிப்பாளர்கள் ஆகியுள்ளார்கள். 

Draupathi, திரெளபதி, draupathi movie, mogan g, director mogan,

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜீத்தின் மைத்துனரும், ஷாலினியின் சகோதரருமான ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பெண் சிங்கம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக டூலெட் படத்தில் நடித்த சுசீலா நடித்துள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த  ஜூபின் மீண்டும் இயக்குனர் மோகன் கூட்டணியில் இணைந்துள்ளார்.  

Draupathi, திரெளபதி, draupathi movie, mogan g, director mogan,

மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர் கருணாஸ், ஜீவா ரவி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் மறுமலர்ச்சி பாரதி இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் பங்கு பெற்று நடித்துள்ளார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை பகுதிகளில் நடைபெற்றது. 

Draupathi, திரெளபதி, draupathi movie, mogan g, director mogan,

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, இதுவரை திரையில் காட்டப்படாத, அரியலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் சமூகத்தில் நிலவும் ஒரு பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் படமாக அமையும் என படம் ஆரம்பித்தது முதல் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இன்று (30.08.2019) மாலை 4 மணிக்கு திரௌபதி திரைப்படத்தின் தலைப்பு தொகுப்பு (title design) மற்றும் இரவு 7 மணிக்கு முன்னோட்டம் (motion poster) வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.  

Draupathi, திரெளபதி, draupathi movie, mogan g, director mogan,

சமூகத்தில் நிலவும் ஒரு முக்கியமான பிரச்சனை, கிராமப்புறங்களில் நடக்கும் கதை, அதையும் தாண்டி தமிழ் திரையுலகின் முதல் கூட்டுத் தயாரிப்பு படம் என்ற பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Draupathi movie motion poster released in social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->