ரஜினிக்கு கதை கூற வந்தவர்களுக்கு அதிர்ச்சி.! ரஜினி தலைகீழா மாறிட்டாரே.?! - Seithipunal
Seithipunal


தனது புதிய படங்களில் பலவித கண்டிஷன்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்து வருகிறாராம். இதனால், ரஜினிகாந்த்துக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்கள் குழப்பமடைந்து இருக்கின்றனர். 

முழுமையாக அரசியல் வாழ்விற்கு தடை போட்டு விட்டு ரஜினிகாந்த் தற்போது சினிமாவில் தீவிரமாக இயங்க முடிவெடுத்துள்ளாராம். எனவே, அவர் இளம் இயக்குனர்களாக பார்த்து தேர்ந்தெடுக்கிறாராம். அத்துடன் சீனியர் இயக்குனர்களின் படங்களில் நடிக்க நேர்ந்தால் கதையை கேட்டுவிட்டு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

அண்ணாத்த திரைப்படத்திற்குப் பின்னர் எந்த படத்தில் நடிக்கலாம் என்று தீவிரமாக யோசித்து வருகிறாராம். தேசிங்கு பெரியசாமி அல்லது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கலாம் என்று ஆலோசனை செய்து வருகிறார். 

அத்துடன் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் இளம் நாயகிகளை எனக்கு கதாநாயகியாக வைக்கக் கூடாது என்றும், என் வயதுக்கு ஏற்றபடி கதாபாத்திரத்தை கொடுக்க வேண்டும் என்றும் குத்து பாடல் டூயட் பாடல் போன்றவற்றை கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும் என்றும் ரஜினி கண்டிஷன் போட்டிருக்கிறாராம். இதனால் அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

directors shock about rajini condition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->