வெப்சீரிஸில் சந்தனக்காடு வீரப்பன்.! 4 மொழிகளில் கதையாகிறது.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வீரப்பன் வாழ்ந்த காலகட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களுக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் அவர். அவரை கட்டுப்படுத்த இயலாத காவல்துறை கூட அவரை விஷம் வைத்து கொலை செய்ததாய் வரலாறு உண்டு. வீரப்பனின் வாழ்க்கை வரலாறு பற்றி நிறைய டாக்குமெண்டரி, குறும் படங்கள் வெளிவந்துள்ளன. 

தமிழில் சந்தனக்காடு என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ஒளிபரப்பாகி உள்ளது. இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் வீரப்பன் குறித்து ஒரு படத்தை எடுத்து இருந்தார். சிலர் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை திரித்து அவரை வில்லனாக கன்னடத்தில் படம் எடுத்து இருந்தனர். இதற்கு தமிழகத்தில் இருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு வெப்சீரிஸாக வெளியாகப் போவதாக சில தகவல்கள் கூறுகின்றன. இந்த தொடரில் கன்னட ஆக்டர் கிஷோர் என்பவர் வீரப்பனாக நடிக்கின்றார். இதற்கு 'ஹன்டர் பார் கில்லிங்' என்று டைட்டில் வைத்திருக்கின்றனர். விஜய் மில்டன் ஒளிப்பதிவில், விஜய் சங்கர் இசையமைப்பில் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாராகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director ramesh make sandhanakadu veerappan history


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->