பிரபல இயக்குனருக்கு அழகான ஆண் குழந்தை..! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தமிழ் திரையுலகம்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் நடித்துள்ள கிரீடம் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குனர் ஏ.எல்.விஜய். இவர் பிரபல தயாரிப்பாளரான ஏ.எல்.அழகப்பன் மகனும் ஆவார். இவர் பிரபல இயக்குனர் பிரயதர்ஷனிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர்.  

இதன்பின்னர் இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்களாக மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, தேவி, வனமகன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படம் பல விருதுகளை குவித்தது, தமிழக அரசின் விருதும் கிடைத்தது. 

இப்படத்தில் நடித்த அமலா பால் மீது காதல் வயம் ஏற்படவே, இவர்கள் இருவரும் காதலித்து 2014 ஆம் வருடத்தில் திருமணம் செய்து 2016 ஆம் வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். 

இந்த விஷயங்களுக்கு பின்னர் திரைத்துறையில் இயக்கத்தில் கவனமாக இருந்த விஜய், குடும்பத்தாரின் வேண்டுகோளின் பேரில் மருத்துவர் ஐஸ்வர்யாவை கடந்த வருடத்தில் திருமணம் செய்தார். இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யா - விஜய் தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director AL Vijay have cute baby


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->