அந்த நடிகருடன் நடிப்பது தான் அவர் லட்சியமாம்.! சர்பேட்டா பட நாயகி வித்தியாசமான பதில்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய் மற்றும் தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ரங்கன் வாத்தியார், டான்சிங் ரோஸ், டாடி, வேம்புலி ஆகிய அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் மாரியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள துஷாராவின் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சார்பட்டா பரம்பரை படத்தில், நடித்துள்ள துஷாரா திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் என்பவரின் மகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து துஷாராவின் தந்தை பற்றிய தகவல் வெளியாகிய இந்த, திமுகவினர் மிகவும் துஷாராவை கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகை துஷாரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம் எந்த நடிகருடன் உங்களுக்கு நடிக்க ஆசை என்ற கேள்வியை கேட்டுள்ளனர். 

அதற்கு துஷாரா தனுஷுடன் இணைந்து நடிப்பதுதான் என்னுடைய குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார். பொதுவாக இதுபோன்ற கேள்விகளுக்கு பல நடிகைகளும் ரஜினிகாந்த் என்றுதான் பதிலளிப்பார்கள். ஆனால், துஷாரா கூறிய பதிலால் ரஜினியின் மார்க்கெட்டுக்கு பங்கம் ஏற்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhusara ans about dhanush 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->