தில்லுக்கு துட்டு - 2 படத்தின் முக்கிய அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் "தில்லுக்கு துட்டு". இந்த படத்தில் கதாநாயகியாக சனன்யா காஜல் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களான கருணாஸ்., ராஜேந்திரன்., ஆனந்தராஜ்., சிங்கமுத்து., லொள்ளு சபா மனோகர் மற்றும் மயில்சாமி ஆகியோர் நடித்திருந்தனர். 

இந்த படமானது காமெடி நிறைந்த திகில் படமாக அனைத்து தரப்பு மக்களும் ஆதரித்து., பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்., இந்த படத்தின் இரண்டாம் பாகமானது எடுக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன் படி மீண்டும் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானத்தின் கூட்டணியில் தில்லுக்கு துட்டு -2 ம் பாகமானது எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஸ்ரீதா சிவதாஸ் மற்றும் ராஜேந்திரன் நடித்துள்ளனர். 

இந்த படத்தை ஹான்ட் மேட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான இசையமைப்பை சபீர் அவர்கள் நிறைவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 


இந்த படமானது வரும் 29 ம் தேதியன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில்., படத்தின் சிங்கள் பாடல் காட்சிகள் வரும் 12 ம் தேதியன்று வெளியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhilluku Dhuddu 2 movie announcement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->