விஜய்க்காக பீஸ்ட் படத்தில் பாடும் முக்கிய நடிகர்.! வாவ்.. இது வேற லெவல் அப்டேட்.!
Dhanush sings a Song for Actor Vijay
நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னையில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் அரங்கு உருவாக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் பீஸ்ட் படத்திற்காக நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாட இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்க்கு பொருந்துகிற வகையில் தனது குரலின் மாடுலேஷனை மாற்றி தனுஷ் பாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dhanush sings a Song for Actor Vijay