இளைய சூப்பர் ஸ்டார் தனுஷா.?! வைரல் போஸ்டரால் ரசிகர்கள் குஷி.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின்ன் முன்னணி நடிகராக வலம் வருகின்ற நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தன்னுடைய 43-வது திடைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கு மாறா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் புகைப்படம் மற்றும் டைட்டில் சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றொரு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். டோலிவுட்டில் நடிகர் தனுஷ் நேரடியாக நடிக்கின்ற முதல் படம் இது தான்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகின்றார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றது. இது தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாக இருக்கின்றது.

இத்தகைய நிலையில், நடிகர் தனுஷ் நேற்று தன்னுடைய 38வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றார். அவருக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இளைய சூப்பர் ஸ்டார் என அடைமொழி போட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush poster Viral about young super star


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->