தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தான் இப்போது பிரபல நடிகை!. - Seithipunal
Seithipunal



தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், கமலஹாசன், நாசர், வடிவேலு ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தேவர்மகன். இந்தப்படம் தற்போதுவரை ஒரு மாஸ் படமாகவே இருந்துவருகிறது.

தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சினிமா, சீரியல் என மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்துவருகிறார் நடிகை நீலிமா ராணி.

தேவர் மகன் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு பேத்தியாக நடித்திருப்பார் நீலிமா. அந்த படத்தில் "போற்றி பாடடி பெண்ணே.." என்ற பாடலுக்கு வரும் குழந்தை தான் நடிகை நீலிமா ராணி. இவர் தேவர்மகன் படத்தில் நடித்தபிறகு ஏகப்பட்ட சீரியல்கள், படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் நீலிமா.

 இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் 15 கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devarmagan child artist


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->