பொங்கல் நாளில் தித்திப்பான செய்தி கூறிய டிடி.! ரசிகர்கள் கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் பலருக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் பிடித்தமான தொகுப்பாளினி.

மேலும், 20 வருடங்களாக சின்னத்திரையில் அவர் வெற்றி நடைபோட்டு வருகின்றார். விருது விழாக்கள், போட்டியில் நடுவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமாக்களில் சில முக்கிய கதாபாத்திரங்கள் என அசத்தி ரசிகர்களை தனக்கென வைத்திருப்பவர் டிடி.

இருபது வருடங்களாக சின்னத்திரையை கலக்கியவர் என்ற அங்கீகாரமும் அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்ச்சி ஆடையில் சமீப காலமாக தோன்றுகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை DD பொங்கலை முன்னிட்டு நீல கலர் புடவையில் மிகவும் அசத்தலாக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். அத்துடன், தான் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்க இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DD pongal blue saree


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->